‘சுழல்’ வெப் தொடரின் இரண்டாம் பாகம்! முதற்கட்ட பணிகள் துவக்கம்:
கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் நடிப்பில் பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியான வெப் தொடர் ‘சுழல்’. கிரைம் த்ரில்லர் பாணியில் சுவாரஸ்ய கதைக்களத்தில் வெளியான இந்த தொடருக்கு ‘விக்ரம் வேதா’ இய்க்குனர்கள் புஷ்கர் – காயத்ரி இணைந்து கதை எழுதியிருந்தனர்.


முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘சுழல்’ தொடரின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. மேலும் இதற்கான முதற்கட்ட பணிகள் சூடுபிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதில் நடிக்கும் நடிகர்கள், டெக்னீஷியன்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண