சுழல் வெப் சீரிஸ் விமர்சனம் | Suzhal: The Vortex Web Series Review and Rating

0
Suzhal The Vortex Web Series Review and Rating
Suzhal The Vortex Web Series Review and Rating

சுழல் வெப் சீரிஸ் விமர்சனம் | Suzhal: The Vortex Web Series Review and Rating

படக்குழு: 

நடிகர்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர்.

இசை: சாம் CS

ஒளிப்பதிவு: முகேஷ்வரன்

எடிட்டிங்: ரிச்சர்ட் கெவின்

தயாரிப்பு: வால்வாட்சர் பிலிம்ஸ்

இயக்கம்: பிரம்மா, அனுசரண் முருகையன்

OTT: அமேசான் பிரைம்.

Suzhal The Vortex Web Series Review and Rating
Suzhal The Vortex Web Series Review and Rating

கதைச்சுருக்கம்:

வெப் சீரிஸின் துவக்கமே சிமென்ட் பாக்டரியில் வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சம்பள உயர்வு கேட்டு ஆரம்பித்த இந்த போராட்டம் கடைசியில் போலீஸ் தடியடியில் சென்று முடிகிறது. இந்நிலையில் திடீரென அந்த பாக்டரிக்கு யாரோ தீ வைக்க முழுவதுமாக எரிந்து சாம்பலாகி விடுகிறது. இதற்கு காரணம் யூனியன் லீடர் பார்த்திபன் தான் என நிர்வாகம் போலீஸில் புகாரளிக்க, அவர் கைது செய்யப் படுகிறார். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பார்த்திபனின் மகள் காணாமல் போகிறார். பார்த்திபன் மகள் எங்கே? உண்மையில் பார்த்திபன் தான் அந்த பாக்டரியை கொளுத்தினாரா? இதற்கு பின்னணியில் இருக்கும் மர்ம காரணங்கள் என்ன? என்பதே கதைச்சுருக்கம்.

Suzhal The Vortex Web Series Review and Rating
Suzhal The Vortex Web Series Review and Rating

FC விமர்சனம்:

விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் & காயத்ரி தயாரிப்பில் பிரம்மா, அனுசரண் முருகையன் ஆகியோர் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள இப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி என நான்கு முக்கியமான பாத்திரங்கள், இவர்கள் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். அதிலும் கதிரை விட ஸ்ரேயா ரெட்டி போலீஸ் பாத்திரத்தில் மிடுக்காக வலம்வருகிறார். தங்கையை தொலைத்த பரிதவிக்கும் அக்காவாக ஐஸ்வர்யா ராஜேஷ், சிக்கலில் மாட்டிகொண்டு விழிக்கும் பார்த்திபன் என தங்களது பாத்திரங்களை நிறைவாகவே செய்துள்ளனர். இவர்களை தவிர வரும் சந்தான பாரதி உள்பட துணை நடிகர்களுமே சிறப்பாகவே நடித்துள்ளனர்.

👉 வீட்ல விசேஷம் திரைப்பட விமர்சனம்

👉 நயன்தாராவின் ‘ஓ2 (O2)’ திரைப்பட விமர்சனம்  

டெக்னிக்கல் டீமை பொறுத்தவரை, படத்தை உலகதரமாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன், இரவு நேர காட்சிகளில் ஒரு தெளிவு, கிரைம் திரில்லர் கதைகளுக்கே உண்டான கலர்டோன் என தனது பணியை செவ்வனே செய்து கொடுத்துள்ளார். சாம் CS -ன் பின்னணி இசையும், ரிச்சர்ட் கெவினின் எடிட்டிங்கும் கூடுதல் பலம். அதிலும், 5 – 8 எபிசோட்கள் விறுவிறுப்பாக செல்ல இவர்கள் வலு சேர்த்துள்ளனர். இப்படத்தின் கதையும், திரைக்கதையும் கிரைம் திரில்லர் களத்திற்கான அனைத்து அம்சங்களுடன், ஆழமான கதாப்பாத்திர வடிவமைப்புடன் எழுதப்பட்டுள்ளது, இதுவே பெரிய பலமாகவும் அமைந்துள்ளது.

Suzhal The Vortex Web Series Review and Rating
Suzhal The Vortex Web Series Review and Rating

இந்த வெப் சீரிஸின் குறையாக தெரிவது துவக்க எபிசோட்களில் வரும் லேகிங் மற்றும் எளிதாக யூகிக்க கூடிய சில விஷயங்கள் சற்று சோம்பல் முறிக்க செய்கிறது. அதிலும் 4வது எபிசோட் இந்த கிரைம் திரில்லர் களத்தை விட்டு வெளியே சென்று முழுக்க முழுக்க ரொமான்டிக்காக செல்கிறது. அது ரொம்ப கொடுமை. ஆனால், அந்த 4வது எபிசோட் கிளைமாக்ஸில் டுவிஸ்ட்டுடன் ஆரம்பிக்கும் விறுவிறுப்பு கடைசி எபிசோட் வரை குறையவில்லை. ஆக, முதல் 4 எபிசோட்கள் நமக்கு கொஞ்சம் பொறுமை தேவை. இறுதியாக சுழல் வெப் சீரிஸ் எப்படி என்றால், சில லேகிங் காட்சிகளை பொறுத்துக் கொண்டால் நல்ல கிரைம் திரில்லர் கதையை பார்த்த திருப்தி கண்டிப்பாக வரும். அந்தளவிற்கு மொத்தமாக பார்த்தல் முழு நிறைவை தருகிறது. அடல்ட் காட்சிகள் என எதுவும் பெரிதாக இல்லை, குடும்பத்துடன் கண்டு ரசிக்கக்கூடிய ஒரு தரமான வெப் சீரிஸ் இந்த சுழல்.

Suzhal: The Vortex Web Series FC Rating: 3.5 /5

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்