பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது கொலையா? தற்கொலையா? என்கிற இதுதொடர்பான விசாரனைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது.


மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தின் மூலம் இந்தியா முழுக்க ஒரே படத்தில் பிரபலமானவர் சுஷாந்த். அழகிய தோற்றம், அசாத்திய நடனம், அதற்கேற்ற நடிப்பு என அனைத்தும் ஒரே சேர இருந்தும், திரைப்பயணம் குறித்த மன அழுத்தம் அவரை இந்த முடிவிற்கு தள்ளியுள்ளது. இந்நிலையில் சுஷாந்த் சிங் நடித்துள்ள கடைசி படமான ‘தில் பெசாரா’ திரைப்படம் வரும் ஜூலை 24 -ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், சுஷாந்தின் கடைசி படத்தை தியேட்டரில் வெளியிட கோரிக்கை வைத்தார். எனினும் எந்த காரணத்தினாலோ இப்படம் தற்போது OTT தளத்தில் வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்தை ஹாட்ஸ்டாரில் அனைவரும் இலவசமாக காணலாம் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து OTT -ல் வெளியாகும் வரலக்ஷ்மியின் திரைப்படம்!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…