நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் – சூர்யா பாராட்டு!

0

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் zeeplux OTT தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் க/பெ ரணசிங்கம்’. நேற்றைய முன்தினம் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லபோனால் OTT-ல் வெளியான படங்களிலேயே அதிக பாராட்டுக்களை பெற்ற படமாக இப்படம் அமைந்துள்ளது.

Ka Pae Ranasingam Movie Tamil Review and Rating

* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா இப்படத்தை வெகுவாக பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் #KaPaeRanasingam இயக்குனர் விருமாண்டி, விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், பவானி ஸ்ரீ, KJR ஸ்டுடியோஸ், Zee மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்” என பதிவிட்டுள்ளார்.

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...