சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. சூர்யா-வின் 2D என்டர்டையின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை நேரடியாக அமேசான் OTT தளத்தில் வெளியிடபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சூர்யா.
மேலும், இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ரூ.5 கோடியை கொரோனா முன்கள பணியாளர்கள் மற்றும் திரைத்துறையில் சேர்ந்தவர்களுக்கும் பிரித்து கொடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி, பெப்சி தொழிலாளர் சங்கத்திற்கு ரூ.1 கோடி, நடிகர் சங்கத்திற்கு ரூ.20 லட்சம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூ.30 லட்சம் என ரூ.1.50 கோடியை பிரித்து வழங்கினார். இந்நிலையில் தற்போது மீதமுள்ள ரூ.3.50 கோடியில், பொதுமக்கள் மற்றும் தன்னலமின்றி கொரோனா தோற்று பாதித்தவர்களுக்கு பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற மருத்துவத்துறை பணியாளர்கள் மேலும் பொதுநல சிந்தனையுடன் கொரோனா பணியில் களத்தில் நின்று பணியாற்றிய காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மை பணியாளர்கள், மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்ககுளுக்கு ரூ.2.50 கோடி ரூபாயை கல்வி ஊக்கத் தொடையாக வழங்கவுள்ளதாக கூறியுள்ளார்.


மற்றும் குறிப்பிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் அல்லாத, திரையுலகை சார்ந்த அன்புக்குரிய விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், பிரதிநிதிகள், மக்கள் தொடர்பாளர்கள்(PRO), திரையரங்க தொழிலாளர்கள் மற்றும் எனது நற்பணி இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு மீதமுள்ள ரூ.1 கோடியை வழங்கவுள்ளதாக கூறியுள்ளார். மேற்க்கூரியவர்களின் குடும்பத்தில் பள்ளி/கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகையாக வளங்கக்கப்படும் எனவும் கூறியுள்ளார். உண்மையில் பெரிய மனது, தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
கர்ப்பமாக இருக்கிறேனா? நடிகை சமந்தா நக்கல் பதில்






லாஸ்லியா நடிக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம்! புதுப்பட தகவல்
நடிகை ரைசா வில்சனின் ஓணம் சிறப்பு படங்கள்!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...