‘அதிகார அத்துமீறல் முடிவிற்கு வரவேண்டும்’ சூர்யா கண்டனம்

0
Suriya's statement about Jeyaraj and Fennix Death

சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் கொடூர மரணத்திற்கு இந்தியா முழுக்கு கண்டன குரல்கள் எழ துவங்கியுள்ளன. அந்த வகையில் திரைத்துறையில் பலரும் தங்களது கண்டனங்களை கூறி வருகின்றனர்.

Kollywood Celebrities wants Justice for Jeyaraj and Fenix

தற்போது நடிகர் சூர்யா இதுதொடர்பாக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, ” மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்கு கூட மரண தண்டனை கூடாது என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில், இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழந்த போலிஸாரின் ‘லாக்கப் அத்துமீறல்’ காவல் துரையின் மாண்பை குறைக்கும் செயல். இது எதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம்’ என கடந்து செல்ல முடியாது. 

போலீசாரால் கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரையும் அரசு மருத்துவர் சோதனை செய்து ‘நலமாக இருப்பதாக’ சான்று அளித்திருக்கிறார். நீதியை நிலை நாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட், பாதிக்கப்பட்டவர்களின் நிலையை பரிசோதிக்காமல், ‘இயந்திர கதியில்’ சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சிறையில் நடத்தப்பட வேண்டிய சோதனைகளும் முறையாக நடக்கவில்லை. இத்தகைய ‘கடமை மீறல்’ செயல்கள், ஒரு குடிமகனின் உரிமையில் நம் ‘அதிகார அமைப்புகள்’ காட்டும் அலட்சியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அதனால் இதுபோன்ற ‘துயர மரணங்கள்’ ஒரு வகையான ‘திட்டமிடப்பட்ட குற்றமாக’ நடக்கிறது.   

Suriya's statement about Jeyaraj and Fennix Death

ஒருவேளை இருவரின் மரணம் நிகழாமல் போயிருந்தால், போலீசாரின் இந்தக் கொடூர தாக்குதல் நம் கவனம் பெறாமலே போயிருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தாலும், ‘போலீசாரை எதிர்த்தால் என்ன நடக்கும்’ என்பதற்கான வாழும் சாட்சியாக இருப்பார்கள். தங்களின் மரணம் மூலம் தந்தை மகன் இருவரும் இந்தச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறார்கள். இந்த கொடூர மரணத்தில் தங்களுடைய கடமையை செய்யத் தவறிய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். உயர்நீதி மன்றம்தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவது, நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளிக்கிறது.

இதேபோல ‘தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது’ என்கிற நம்பிக்கையை அரசாங்கமும், நீதி அமைப்புகளும் மக்களிடம் உருவாக்க வேண்டும். மாறாக, நமது ‘அதிகார அமைப்புகள்’ அவநம்பிக்கையையே ஏற்படுத்துகின்றன. இரண்டு அப்பாவிகளின் மரணத்திற்குப் பிறகும் உடனடியாக எடுக்கப்படுகிற நடவடிக்கை, சம்பந்தப் பட்டவர்களை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்வது மட்டுமே. ஆயுதப்படையில் பணியாற்றுவது என்பது ‘தண்டனைக்கால பணியாக’ பொது மக்கள் மத்தியில் ஒரு பிம்பத்தை இது உருவாக்குகிறது. ‘இன்டு உயிர் போவதற்கு காரணமானவர்களுக்கு இதுதான் தண்டனையா?’ என்று எழுந்த விமர்சனத்திற்குப் பிறகே, சம்பந்தப்பட்ட போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Suriya's statement about Jeyaraj and Fennix Death

காவல்துறையில் அர்பணிப்புடன் தன் கடமையை செய்கிற பலரை தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். ஒட்டு மொத்த நாடும் இயங்க முடியாமல் ஸ்தம்பித்து நிற்கிற இந்த நேரத்திலும் ஓய்வில்லாமல் மக்களின் நலனுக்காக காவல்துறையினர் உழைக்கின்றனர். ‘கொரோனா யுத்தத்தில்’ களத்தில் முன் வரிசையில் நிற்கிற காவல்துறையினருக்கு தலை வணங்குகிறேன். அதேநேரம் அதிகாரத்தை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தும் காவல்துறையினருக்கு எனது கடும் கண்டனங்கள். அதிகார அத்துமீறல் வன்முறையால் ஒருபோதும் மக்களின் மனதை வெல்ல முடியாது. அன்பும், அக்கறையும் கொண்டு கடமையை செய்கிற காவல்துறையினரே மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.

ஒரே நேரத்தில் இரண்டு உயிர்கள் பலியாகி இருப்பது, ஒரு குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தந்தையும், மகனையும் இழந்து வாடுகிற அந்த குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். இனிமேலும் இதுபோன்ற ‘அதிகார வன்முறைகள்’காவல்துறையில் நிகழாமல் தடுக்க, தேவையான மாற்றங்களை, சீர்த்திருத்தங்களை அரசும், நீதிமன்றமும், பொறுப்பு மிக்க காவல் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். குற்றம் இழைத்தவர்களும், அதற்கு துணை போனவர்களும் விரைவாக தண்டிக்கப்பட்டு ‘நீதி நிலைநிறுத்தப்படும்’ என்று பொதுமக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன்” என தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.

Suriya's statement about Jeyaraj and Fennix Death
Suriya’s statement about Jeyaraj and Fennix Death
Suriya's statement about Jeyaraj and Fennix Death
Suriya’s statement about Jeyaraj and Fennix Death

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

👉 விஷால் நடிப்பில் ‘சக்ரா’ திரைப்படத்தின் டிரைலர் வீடியோ

👉 ‘இது மரணம் இல்லை கொலை’ திரைத்துறை வட்டாரத்தில் குவியும் கண்டனங்கள்

👉 சாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா!

👉 புல்லட் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது தவறி விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

👉 சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!

👉 சமந்தா முத்தமிட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு? உண்மை நிலவரம்

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...