‘அகண்டா’ இயக்குனருடன் கைக்கோர்க்கும் சூர்யா! சுவாரஸ்ய அப்டேட்

0
Suriya's next movie with Akhanda Director
Suriya's next movie with Akhanda Director

‘அகண்டா’ இயக்குனருடன் கைக்கோர்க்கும் சூர்யா! சுவாரஸ்ய அப்டேட்:

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து மீண்டும் சுதா கொங்காரா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதைத் தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’, ஹிந்தியில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘கர்ணா’ ஆகிய படங்களை வரிசைக்கட்டி வைத்திருக்கிறார் சூர்யா. தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் போயபதி சீனு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

Suriya's next movie with Akhanda Director
Suriya’s next movie with Akhanda Director

இந்நிலையில் தற்போது சமீபத்திய பெட்டி ஒன்றில் இதை உறுதி செய்துள்ளார் இயக்குனர் போயபதி சீனு. அவர் கூறியதாவது, “நான் அடுத்தடுத்து சூர்யா, மகேஷ் பாவுவை வைத்து படங்கள் இயக்கவுள்ளேன். இதில் யார் படம் முதலில் துவங்குமென இப்போது சொல்ல இயலாது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என கூறியுள்ளார். இவர் சமீபத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் ‘அகண்டா’ & ராம் போதினேனி நடிப்பில் ஸ்கந்தா ஆகிய படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

‘தி ரோட்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘இறுகப்பற்று’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘ரத்தம்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0