‘கங்குவா’ படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்:
சூர்யா – சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. UV கிரியேஷன்ஸ் & ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.


இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அடுத்த மாதம் பேங்காக்கில் படமாக்கப்பட உள்ளது. ஏற்கனவே நடிகர் நட்டி மற்றொரு வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ படத்தின் ஸ்பெஷல் Glimpse வீடியோ இதோ
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண