சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது?:
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘கங்குவா’. UV கிரியேஷன்ஸ் & ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.


பாண்டிச்சேரி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது ப்ரேக் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் 20ஆம் தேதியிலிருந்து சென்னையில் இப்படத்தின் ப்ரீயட் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…