‘கங்குவா’ படத்தின் முதல் விமர்சனத்தை பதிவு செய்த பிரபலம்! முழு விவரம் இதோ

0
Suriya's Kanguva Movie First Review
Suriya's Kanguva Movie First Review

‘கங்குவா’ படத்தின் முதல் விமர்சனத்தை பதிவு செய்த பிரபலம்! முழு விவரம் இதோ:

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படைப்பு கங்குவா. ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் ‘நட்டி’ aka நடராஜ், ஜகபதி பாபு, யோகி பாபு, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Suriya's Kanguva Movie First Review
Suriya’s Kanguva Movie First Review

பிரம்மாண்ட செலவில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தை பார்த்து விட்டு மெய்சிலிர்க்க பாராட்டியுள்ளார் பாடலாசிரியர் விவேகா. அவர் கூறியுள்ளதாவது, “‘கங்குவா’ படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்… Feeling very proud to be a part of this great film” என தனது முதல் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். இதனை கண்ட சூர்யா ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பின் உச்சத்திற்கே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

விஜயுடன் 4வது முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை!

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0