சூர்யாவின் ‘கங்குவா’ டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்கப்பட்டதா?: சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் கங்குவா. பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துவரும் இப்படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3D தொழில்நுட்பத்தில் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை 80 கோடிக்கு அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் நடைபெற்று வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…