10 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் சூர்யா – சிறுத்தை சிவா திரைப்படம்

0
Suriya-Siruthai Siva movie release in 10 languages
Suriya-Siruthai Siva movie release in 10 languages

10 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் சூர்யா – சிறுத்தை சிவா திரைப்படம்: நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தில் முன்னணி பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

Suriya-Siruthai Siva movie release in 10 languages
Suriya-Siruthai Siva movie release in 10 languages

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். பீரியட் படமாக உருவாகவுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளதாக படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE