blank

நமது கல்வி உரிமை காப்போம்! நடிகர் சூர்யா அறிக்கை

0

நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழுவிடம் முறையிட வேண்டுமென நடிகர் சூர்யா கோரிக்கை விடுத்துள்ளார். நீட் தேர்வு தொடர்பாகவும், அதனால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வுசெய்ய தமிழக அரசு நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்திருக்கிறது. மேலும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க neetimpact2021@gmail.com என்ற இணையதளத்தையும் உருவாக்கியுள்ளது.

Suriya Latest Statement about Neet Exams
Suriya Latest Statement about Neet Exams

ஜகமே தந்திரம் திரைப்பட விமர்சனம்

இந்நிலையில் தற்போது இதுதொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.  அதில், நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் முறையிடுக என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அரசுப்பள்ளியில் படித்து பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம். இங்கு ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிறது. இருவேறு கல்வி வாய்ப்பு இருக்கிற சூழலில் தகுதியைத் தீர்மானிக்க ஒரே தேர்வுமுறை என்பது சமூக நீதிக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.

Suriya Latest Statement about Neet Exams
Suriya Latest Statement about Neet Exams

சமூக வலைத்தளத்தில் நாங்கள்:

FacebookTwitter | InstagramYoutube

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...