சூர்யா தற்போது தான் தயாரித்து, நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார். ஏனெனில் மே மாதமே வெளியாகவிருந்த இப்படம் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போனது. இந்நிலையில் எப்போது ரிலீஸ் என ரசிகர்கள் ஒருபுறம் காத்திருக்க, ரசிகர்களை போல் சூர்யாவும் காத்துக்கொண்டிருக்கிறார்.


‘குயின் 2-வில் பரபரப்பு காட்சிகள் அதிகம்’ – ரம்யா கிருஷ்ணன்
சுதா கொங்காரா இயக்கியுள்ள இப்படம் சமீபத்தில் தான் சென்சார் சான்றிதழை பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் ஆதர்ஷ்ட கூட்டணியான இயக்குனர் ஹரியுடன் இணைந்துள்ளார். ‘அருவா’ என பெயரிட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. ராக்ஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கவுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறனுடன் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் படம் என வரிசைக்கட்டி நிற்கிறது சூர்யா நடிக்கவுள்ள படங்கள், அந்த வரிசையில் தற்போது மீண்டும் சூர்யாவுடன் கூட்டணி அமைக்கவுள்ளார் விக்ரம்.கே.குமார்.


இவர் சூர்யாவை வைத்து ’24 ‘ என்ற டைம் டிராவல் படத்தை இயக்கினார். டெக்னாலாஜி அளவில் சிறந்த படமாக உருவான இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. 2 ஹீரோ -வில்லன் என 3 கதாப்பாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யாவுடனான அடுத்தப்படம் குறித்த தகவலை விக்ரம் குமார் சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “அடுத்து எப்போது கூட்டணி சேரலாம் என்று சூர்யா தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் தற்போது அவருக்கு ஒரு புதிய கதையை கூறி இருக்கிறார் விக்ரம் குமார். அது சூர்யாவிற்கு பிடித்துபோக உடனே அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் சூர்யா. இந்தப்படம் அனேகமாக 2021 -ல் துவங்கும்” என கூறியுள்ளார். இதையறிந்த ரசிகர்கள் ஒருவேளை 24 படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ என கேள்வியெழுப்பி வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் த்ரில்லரான ‘பெண்குயின்’ டீசர்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...