சுதா கொங்காரா அடுத்து இயக்கும் படத்தில் சூர்யா இல்லை! இந்த ஹீரோதான்

0
Suriya is not in Sudha Kongara's next film
Suriya is not in Sudha Kongara's next film

சுதா கொங்காரா அடுத்து இயக்கும் படத்தில் சூர்யா இல்லை! இந்த ஹீரோதான்: இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளராக பணியாற்றி, இறுதிச்சுற்று படத்தின் மூலம் சிறந்த இயக்குனர் என பெயரெடுத்தவர் சுதா கொங்காரா.

இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்க ‘சூரரைப் போற்று’ என்கிற படத்தை இயக்கினார். அமேசான் பிரைமில் நேரடியாக வெளியான இப்படம் தற்போது 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளது.

Suriya is not in Sudha Kongara's next film
Suriya is not in Sudha Kongara’s next film

இந்நிலையில் இதே சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து தற்போது சுதா கொங்காரா இயக்கி வருகிறார். இந்நிலையில் தமிழில் அடுத்து மீண்டும் சூர்யாவுடன் தான் கூட்டணி வைப்பார் என பல செய்திகள் வலம்வந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவல்படி சுதா கொங்காரா அடுத்து இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பது சூர்யா இல்லையாம், சிம்பு தானாம். சிம்பு நடிப்பில், சுதா கொங்காரா இயக்கும் இப்படத்தை KGF 1,2 படத்தை தயாரித்த Hombale Films தயாரிக்க -வுள்ளதாகவும், மேலும் இப்படம் ஆண்டின் இறுதியில் துவங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்பறம் என்ன சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்…

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE