கைவிடப்படுகிறதா? இல்லை நடிகர் மாறுகிறாரா? அருவா பட திருப்பம்!

0
Suriya - Hari 's Aruvaa Movie Dropped?

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனர்களில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் இயக்குனர் ஹரி. பல ஹிட் படங்களுக்கு சொந்தக்காரரான இவர் சமீபத்திய சில தோல்வி படங்களால் துவண்டு போய்யுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற வெற்றி பாய்ச்சலுடன் தனது ஆஸ்தான ஹீரோவான சூர்யாவுடன் கூட்டணி அமைத்தார். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்க சூர்யா நடிக்க ‘அருவா’ என்கிற படத்தை ஹரி இயக்குவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. ஆறு, சிங்கம் 1,2,3, வேல் தொடர்ந்து 7 -வது முறையாக இணையும் கூட்டணியாக இப்படம் அமைந்தது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி, சமீபத்தில் நடைபெற்ற சூர்யா – ஹரி சந்திப்பு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Suriya - Hari 's Aruvaa Movie Dropped?
Suriya & Hari @ Singam 3 Spot

ஹரி சொன்ன கதையில் சூர்யாவிற்கு சற்று விருப்பம் இல்லாததால், வேறு கதைக்கு செல்ல கேட்டுக் கொண்டதாகவும், இதைக் கேட்ட ஹரி அப்சட் ஆகியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இடைப்பட்ட கேப்பில் இந்த கதையை தனது சொந்தக்காரரான அருண் விஜய் வைத்து இயக்கலாம் என முடிவெடுத்த ஹரி, அதை நோக்கி தற்போது வேலையை முடிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் சூர்யா அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனவே அந்த நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும் என ஹரி நினைத்திருப்பாரோ! என்னவோ!!!

 

சினேகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ

கொட்டும் மழையில் அட்டகாச போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா!

டாக்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி!

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…