சூர்யா – சிறுத்தை சிவா படத்தின் இசையமைப்பாளர் இவரா? வெளியான தகவல்

0
Suriya-Siruthai Siva movie release in 10 languages
Suriya-Siruthai Siva movie release in 10 languages

சூர்யா – சிறுத்தை சிவா படத்தின் இசையமைப்பாளர் இவரா? வெளியான தகவல்: சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். திரைக்கதையில் மாற்றங்கள் தேவைப்படுவதால் ஷூட்டிங்கிற்கு பிரேக் விட்டுவிட்டு திரைக்கதையை பலப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார் இயக்குனர் பாலா.

Suriya and Siruthai Siva Movie Music Composer
Suriya and Siruthai Siva Movie Music Composer

எனவே இந்த இடைவெளியில் சிறுத்தை சிவாவுடனான தனது அடுத்த படத்தை துவங்க முடிவெடுத்துள்ளார் சூர்யா. அதன்படி, படப்பிடிப்பிற்கான வேலைகள் படுஜோராக நடைபெற்று வருகிறது. மிகவிரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் யார்? என்கிற எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்ப தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, சூர்யா – சிறுத்தை சிவா இணையும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. DSP ஏற்கனவே சூர்யாவின் மாயாவி, ஆறு, சிங்கம் 1 & 2 என நான்கு படங்களுக்கு இசையமைதுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE