‘சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்! எங்கு தெரியுமா?

0
Suriya 42 Movie Shoot Begins
Suriya 42 Movie Shoot Begins

‘சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்! எங்கு தெரியுமா?: நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தில் முன்னணி பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். பீரியட் படமாக உருவாகவுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

Suriya 42 Movie Shoot Begins
Suriya 42 Movie Shoot Begins

மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளதாக படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது. முத்துக்காடு பகுதியில் துவங்கியுள்ள இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 25 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. கோவாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை மேட்ச் செய்யும் விதமாக இங்கேயே முத்துக்காட்டில் எடுத்து வருகின்றனர்.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE