‘சூர்யா 42’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது?: சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘சூர்யா 42’. யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் தயாரித்து வரும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. கூடுதலாக 3D தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்கி, சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தீபாவளிக்கு கழித்து சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் தொடங்கவுள்ளது. இதுக்குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துவரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளனர்.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE