‘சூர்யா 42′ பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் இந்த பண்டிகைக்கா?: நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.’சூர்யா 42’ என தற்காலிக பெயரிட்டுள்ள இப்படத்தை UV கிரியேஷன்ஸ் & ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

திஷா பதானி கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி சூர்யா ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE