15 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி

0
Sunrisers Hyderabad Won the match

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடியது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, இதனால் முதலில் பேட்டிங் செய்த ஹைதரபாத் அணி 20 ஓவர் முடிவில் ஹைதரபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்தது. 163 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய டெல்லி அணி துவக்கமுதலே தடுமாற்றத்துடனும், அதிரடியை காட்டாமலும் விளையாடியது. இந்த சீசனை பொறுத்தவரை இது எளிதில் அடித்து வெற்றிபெறக்கூடிய ரன்கள் தான், எனினும் தடுமாறியுள்ளது டெல்லி அணி. இறுதியாக, 20 ஓவர் முடிவில் ஹைதரபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே, 15 வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி. ஹைதராபாத் அணியில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். டெல்லி அணியை பொறுத்தவரை ஷிகர் தவான் 34 ரன்களை அதிகபட்சமாக எடுத்திருந்தார்.

Sunrisers Hyderabad Won the match

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...