13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது போட்டி துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 164 ரன்கள் எடுத்து, 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.


இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் துவக்கம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுக்க துவங்கியது. பிறகு ஜோடி சேர்ந்த தோனி – ஜடேஜா கூட்டணி நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடியது, தோனியும் கடைசி போராடினார் ஆனால் வெற்றி ஹைதராபாத் அணியிடம் சென்றது. 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதரபாத். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 157 ரன்கள் எடுத்து, ஹாட்ரிக் தோல்வியை தழுவியுள்ளது. சென்னை தரப்பில் ஜடேஜா 50 ரன்களும், தோனி 47 ரன்களும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர்.
* அனுஷ்கா நடிப்பில் ‘நிசப்தம்’ திரைவிமர்சனம்
* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...