சுல்தான் திரைப்பட விமர்சனம் | Sulthan Movie Review

0
Sulthan Movie Review

படக்குழு:

நடிகர்கள்: கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், யோகிபாபு மற்றும் பலர்.

பாடல்கள் – விவேக் – மெர்வின்

பின்னணி இசை: யுவன் ஷங்கர் ராஜா

ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்

எடிட்டிங்: ரூபன்

தயாரிப்பு: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

இயக்கம்: பாக்யராஜ் கண்ணன்.

Sulthan Movie Review

கதைச்சுருக்கம்:

நூற்றுக்கும் மேற்பட்ட அடியாட்களை வைத்து ரவுடி தொழில் செய்யும், தலைவன் நெப்போலியன், அவரது மகன் கதாநாயகனான கார்த்தி. ஒருக்கட்டதில் எதிரிகளால் தனது அப்பா கொள்ளப்பட, தலைவன் பொறுப்பு கார்த்தியிடம் வருகிறது. ஆனால், அப்பா செய்ததை போல இல்லாமல் நல்ல வழிக்கு இவர்களை பயன்படுதுவோமென களமிறங்குகிறார். இதற்கிடையில் காதல், எதிரி யார்? எதற்காக நெப்போலியன் இறந்தார்? நாயகன் எதிரிகளை எப்படி பழிவாங்கினார்? என்ற கேள்விகளுக்கான பதிலே முழு கதை.

Sulthan Movie Review
Sulthan Movie Review

FC விமர்சனம்:

ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணனின் இரண்டாவது படம் இந்த சுல்தான். படத்தில் நடிப்பைப் பொறுத்தவரை பெரிய குறையில்லை. காரணம் முக்கிய பாத்திரங்கள் அனைவரும் நடிப்பில் கைதேர்ந்தவர்கள். ஆனால், கதையோ, திரைக்கதையோ அப்படி இல்லை! நாம் பார்த்து சலித்த பல கதைகளை கலவையாக்கி சுல்தானாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். கார்த்திக்கு தெலுங்கில் மார்கெட் இருப்பதால் தெலுங்கு படத்தை தான் டப் செய்து தமிழில் வெளியிட்டிருக்கிறார்களோ என்கிற நினைப்பு அனைவருக்கும் வரும், அந்தளவு மசாலா, கதாப்பாத்திர வடிவமைப்பு எல்லாம் அந்த ரகம்தான்.

கூடவே, தீரன், கைதி போன்ற படங்களில் நடித்த கார்த்தியா இந்த கதையை ஒப்புக்கொண்டார் என்கிற யோசனையும் தவிர்க்க முடியவில்லை. கார்த்தி, ராஷ்மிகாவை தவிர மற்ற அனைத்து கைத்தேர்ந்த நடிகர்களுக்குமே ஒன்லைன் வசனம் தான், அந்த அளவு அவர்களுக்கான காட்சிகள் குறைவு. அப்போ வில்லன்கள் நோ கமெண்ட்ஸ்!…

Sulthan Movie Review
Sulthan Movie Review

என்ன? படத்தில் எதுவுமே நல்லா இல்லையா? என கேட்டால், சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு டாப் கிளாஸ். அதேபோல் யுவனின் பின்னணி இசையும், இண்டர்வல் சீன் போன்ற ஒருசில காட்சிகள் அருமை. பாடல்கள் பெருதும் ஈர்க்கவில்லை. எடிட்டர் நம்மை சோதித்திருக்கிறார். போதும் கடைசியா என்ன சொல்ல வர! என்று கேட்டால் தெலுங்கு ஆக்ஷன் படங்களை விரும்பி பார்ப்பவர்களா நீங்கள்? உங்களுக்கான (உங்களுக்கு மட்டுமான) விருந்து தான் இந்த சுல்தான்.

SULTHAN MOVIE FC RATING: 2.5 /5

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...