தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இவரின் பாடல்கள், பின்னணி இசைக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காத்துக் கொண்டிருக்கிறது.


இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதில் பல சுவாரஸ்யமான ரசிகர்களின் கேள்விகளுக்கு சற்றும் தயக்கமில்லாமல் பதிலளித்து வந்த யுவனிடம், ஒரு ரசிகர் “அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய அச்சம் என்ன? நீங்கள் அதிலிருந்து மீண்டது எப்படி?” என கேட்டார். அதற்கு யுவன் “இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் எனக்கும் தற்கொலை எண்ணங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் கடக்க இஸ்லாம் எனக்கு உதவியது” என பதிலளித்து இருந்தார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தாலும், முன்னணி இசையமைப்பாளராக இருந்தாலும் ஏன்? தற்கொலை எண்ணம் இவருக்கு வந்தது? என அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா தற்போது அஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, விஜய் சேதுபதியின் மாமனிதன், விஷாலின் சக்ரா, சந்தானத்தின் டிக்கிலோனா, களத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம், கசடதபற, அலைஸ் உள்ளிட்ட அரைடஜன் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
Twitter Feed:
Yuvan 😓 pic.twitter.com/XBybLw8F7V
— Unknown (@Mysteri13472103) July 3, 2020
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...