‘சூர்யா 43’ படத்தை இயக்கும் சுதா கொங்காரா! அவரே சொன்னாரா?

0
Sudha Kongara is directing 'Surya 43'
Sudha Kongara is directing 'Surya 43'

‘சூர்யா 43’ படத்தை இயக்கும் சுதா கொங்காரா! அவரே சொன்னாரா?: நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் OTTயில் நேரடியாக வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.

விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல், சிறந்த நடிகர், நடிகை உள்பட 5 தேசிய விருதுகளை அள்ளிக் குவித்தது. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணையுமா? என்கிற ஆவல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

Sudha Kongara is directing 'Surya 43'
Sudha Kongara is directing ‘Surya 43’

இந்நிலையில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சுதா கொங்காரா சமீபத்திய பேட்டியில் அறிவித்துள்ளார். சூர்யா நடிக்கவுள்ள 43வது படத்தை சுதா கொங்காரா இயக்க, 2D என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சூர்யா & ஜோதிகா இப்படத்தை தயாரிக்கவுள்ளனர். இதற்கிடையில் சூர்யா, பாலா, சிறுத்தை சிவா, வாடிவாசல் படங்களை முடித்துவிடுவார் எனவும் கூறப்படுகிறது.

இப்படத்தை அடுத்து சுதா கொங்காரா அடுத்து நடிகர் சிலம்பரசன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. KGF பட தயாரிப்பு நிறுவனமான Hombale Films இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE