நடிகர் சிம்பு அடுத்ததாக ‘பார்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ‘STR 49’ என தற்காலிக பெயரிட்டுள்ள இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தானம் சிம்புவுடன் இணையவுள்ளார்.
Dawn பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது ‘டிராகன்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை காயாடு லோகர் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது…

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…