‘தளபதி’ விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.
மே மாதமே வெளியாகவிருந்த இப்படம் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போனது, தற்போது தீபாவளி வெளியீடாக மாஸ்டர் இருக்குமென திரைத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் சமூக வலைத்தளங்களை கைப்பற்றியுள்ளனர். விஜய் பிறந்தநாள் CDP துவங்கி பல கிரியேடிவ் படங்கள், வீடியோக்களை ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் கோ-ப்ரொடியூசர் லலித்குமார் விஜய்க்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் மாஸான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் தன்னுடைய இந்த நிலையை தானே(விஜய்யே) செதுக்கியதை குறிப்பிடுவதுபோல் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது விஜய் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. லலித்குமார், 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ என்கிற தயாரிப்பு நிறுவனம் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவரது நடப்பு ப்ராஜெக்ட்ஸ் விக்ரமின் கோப்ரா, விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சியான் 60 ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 ‘சுஷாந்த் மரணத்திற்கு இது தான் காரணம்’ கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...