சூரரைப் போற்று திரைப்பட விமர்சனம் | Soorarai Pottru

0
Soorarai Pottru Movie Review and Rating

படக்குழு:

நடிகர்கள்: சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஊர்வசி, பரேஷ் ரவால் மற்றும் பலர்.

இசை: ஜிவி பிரகாஷ் குமார்

எடிட்டிங்: சதீஷ் சூர்யா

ஒளிப்பதிவு: நிகேத் பொம்மிரத்

தயாரிப்பு: 2D என்டர்டெயின்மென்ட்

இயக்கம்: சுதா கொங்காரா.

Soorarai Pottru Movie Review and Rating
Soorarai Pottru Movie Review and Rating

கதை சுருக்கம்:

மதுரை சார்ந்த கோபக்கார இளைஞர் நெடுமாறன் ராஜாங்கம்(சூர்யா), ஏர்போர்ஸில் பணியாற்றினாலும், விமான கம்பெனி ஆரமிப்பதை கனவாக கொண்டு களமிறங்குகிறார். அதே துறையில் இருக்கும் பெரிய முதலைகளை சமாளித்து, விமான சேவையை எளிய மக்களிடம் கொண்டு செல்ல சூர்யா எடுக்கும் முயற்சிகளே படத்தின் கதை சுருக்கம்.

FC விமர்சனம்:

சூர்யா, நெடுமாறன் ராஜாங்கமாக வாழ்ந்துள்ளார் என்றே கூறவேண்டும், அந்த அளவிற்கு சூர்யா என்பவரை திரையில் காணமுடியவில்லை அந்த அளவிற்கு பாராட்டுக்குரிய நடிப்பு. நாயகி அபர்ணா பாலமுரளி வழக்கமாக பாடலுக்கு மட்டுமே வரும் நாயகியாக இல்லாமல் தான் பங்கிற்கு நிறைவாக நடித்துள்ளார். கதாப்பாத்திரங்களை பொறுத்தவரை எந்தவொரு சமரசமும் இல்லாமல் என்ன வாங்கமுடியுமோ அந்த அளவிற்கு நடிப்பை வாங்கியுள்ளார் இயக்குனர்.

Soorarai Pottru Movie Review and Rating
Soorarai Pottru Movie Review and Rating

படத்தின் மிகப்பெரிய பலம் ஜிவி பிரகாஷின் இசை, பாடல்களாகட்டும் பின்னணி இசையாகட்டும் பின்னி எடுத்துள்ளார். அதே போல் ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை இயக்கம் உள்ளிட்ட அனைத்துமே பலமாக அமைந்துள்ளது. இயக்குனர் சுதா கொங்காரா எடுத்துக்கொண்ட கதையை, அதுவும் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை கமர்ஷியல் கலந்து மிக நேர்த்தியாக படமாக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் குறிப்பிடும் இயக்குனர்கள் பட்டியலில் இணைந்து விட்டார் என்றே கூற வேண்டும். வாழ்த்துக்கள் சுதா கொங்காரா!

FC RATING: 3.75/5