சூரரைப் போற்று படத்தின் சென்சார் முடிந்தது! விவரம் இதோ

0
Soorarai Pottru Movie Censor Certificate

சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. சூர்யா-வின் 2D என்டர்டையின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Soorarai Pottru Movie Censor Certificate
Soorarai Pottru Movie Stills

ஜீவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட கால ப்ரொடக்ஷனாக இருந்து வரும் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. மேலும், மே மாதமே இப்படம் வெளியாகவிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எப்போது இந்த படம் வெளியாகுமென ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்ற வெளியாகியுள்ளது. ஊரடங்கு முடிந்து தற்போது சில தளர்வுகளை அரசு கொடுத்துள்ள இந்த இடைவெளியில் சென்சார் வேலையை முடித்து சான்றிதழை பெற்றுள்ளது படக்குழு. இப்படத்திற்கு ‘U’ சான்றிதழை சென்சார் குழு வழங்கியுள்ளது. ஜி.ஆர்.கோபிநாத் வாழ்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Soorarai Pottru Movie Censor Certificate
Soorarai Pottru Movie Censor Certificate

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...