எனது நடிப்பு திறமைக்காக எனக்கு மிகப்பெரிய விருது – S.J.சூர்யா நெகிழ்ச்சி

0
SJ Suryah Latest Tweet Goes Viral
SJ Suryah Latest Tweet Goes Viral

சிலம்பரசன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படம் ’மாநாடு’. நீண்ட தடைகளுக்கு பிறகு வெளியாகியிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ’மாநாடு’ படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு தொலைபேசி மூலம் பாராட்டு தெரிவித்தார் என்பதை பார்த்தோம். அதேபோல் S.J.சூர்யாவுக்கும் தொலைபேசி மூலம் ரஜினிகாந்த் தனது பாராட்டைத் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

SJ Suryah Latest Tweet Goes Viral
SJ Suryah Latest Tweet Goes Viral

இதுகுறித்து பதிவிட்டுள்ள S.J.சூர்யா, ’இன்று எனது நடிப்பு திறமைக்காக எனக்கு மிகப்பெரிய விருது கிடைத்ததாக உணர்கிறேன். ரஜினிகாந்த் அவர்களின் அன்பான பாராட்டு இந்த திரையுலக பயணத்தை எதிர்கொள்ள பெரும் பலத்தை அளிக்கிறது’ என்று அவர் கூறியுள்ளார்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்