நடிகர் சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம்! 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம்

0
Six former Judges Support to Suriya

நீட் தேர்வு அச்சத்தாலும், மனஉலைச்சலினாலும் தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதுக்குறித்து பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சமூக தன்னார்வலர்களும் பல்வேறு வகையில் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி வழங்கிவரும் நடிகர் சூர்யா, நீட் தேர்வு குறித்த தனது ஆதங்கத்தை அறிக்கையாக வெளியிட்டார்.

Six former Judges Support to Suriya
Six former Judges Support to Suriya

அந்த அறிக்கையில், “கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங்‌ மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது” என்ற வார்த்தையை மேற்கோள்காட்டி. திமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் நடிகர் சூர்யா பேசியதாக, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடங்க வேண்டும் என்றும், நீதிமன்ற மாண்பை காக்க வேண்டும் என்று நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதினார்.

Six former Judges Support to Suriya
Six former Judges Support to Suriya

இதையடுத்து நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதிகள் 6 (கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், து.அரிபரந்தாமன், கே.கண்ணன், மற்றும் ஜி.எம்.அக்பர் அலி) பேர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “சூர்யா தெரிவித்துள்ள கருத்துக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க அவசியமில்லை. நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தறற்கொலை செய்து கொண்ட நேரத்தில் சூர்யா கூறியதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக் கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும். உயர் நீதிமன்றத்தின் மாண்பு மீது உள்ள அக்கறையாலும், தேவையற்ற சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்பதாலும் கோரிக்கை வைப்பது எங்கள் கடைமையாகும்” என கூறியுள்ளனர். மேலும், பொதுமக்களும், ரசிகர்களும் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டுவிட்டரில், #TNStandWithSuriya என்ற ஹேஷ்டேக் மூலம் டிரன்ட் செய்து வருகின்றனர்.

வீடியோ:

 

⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு?

நீட் தேர்வு குறித்து சூர்யா அதிரடி அறிக்கை!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…