சிவக்குமாரின் சபதம் திரைப்பட விமர்சனம் | Sivakumarin Sabadham

0

படக்குழு:

நடிகர்கள்: ஹிப்ஹாப் ஆதி, மாதுரி, இளங்கோ குமரன், பிராங்ஸ்டர்  ராகுல் மற்றும் பலர்.

இசை: ஹிப்ஹாப் ஆதி

ஒளிப்பதிவு: அர்ஜுன் ராஜா

எடிட்டிங்: தீபக் S துவாரக்நாத்

தயாரிப்பு: சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் & இன்டே ரீல்ஸ்

இயக்கம்: ஹிப்ஹாப் ஆதி.

Sivakumarin Sabadham Movie Review and Rating
Sivakumarin Sabadham Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

கதைப்படி எந்த வேலையும் இல்லாமல் வெட்டியாக சுற்றித் திரியும் ஹீரோ (ஹிப்ஹாப் ஆதி), ஒருக்கட்டதில் இப்படியே திரிந்துக் கொண்டிருந்தால் என்ன ஆவது என நினைத்த ஹீரோ குடும்பம், ஹீரோவின் சித்தப்பாவுடன் அனுப்பினால் நல்ல வேலை வாங்கிக் கொடுத்து இவனை மாற்றுவார் என அனுப்பி வைக்க, அங்கு நடப்பதோ உல்டா. ஹீரோவுக்கும், அவரது சித்தப்பாவுக்கும் ஒருக்கட்டத்தில் முட்டிக்க, ஹீரோ விடும் சபதம், அதை அவர் நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

Sivakumarin Sabadham Movie Review and Rating
Sivakumarin Sabadham Movie Review and Rating

Instant Cinema Breaking News Follow on Twitter @filmcrazymedia

FC விமர்சனம்: 

பிரண்ட்ஷிப், காதல், காதல் தோல்வி என இதை வைத்தே வண்டி ஒட்டிக் கொண்டிருக்கும் ஹிப்ஹாப் ஆதி, இம்முறை வித்தியாசமாக ஏதாவது செய்திருக்கிறாரா? என்றால் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. நடிகர்கள் பொறுத்தவரை நாயகன் ஆதி, நாயகனின் தாத்தா நடிப்பில் ஓகே. ஆனால் சித்தப்பாவாக வரும் பிராங்ஸ்டர் ராகுல் ஒரே இரிடேட்டிங் தான், படமுழுக்க புலம்பிக்கொண்டு, அழுதுக்கொண்டு நம்மையும் கஷ்டப்படுத்தியிருக்கிறார். யூடூபில் இவரது வீடியோக்கள் நகைச்சுவை கலந்து நன்றாக இருக்கும், இதை நம்பி படம் பார்க்க சென்றால் ஏமாற்றம் தான். நாயகி மாதுரி, வழக்கமான ஹீரோயின் ரோல் தான் பெரிதாக ரோல் இல்லை.

Sivakumarin Sabadham Movie Review and Rating
Sivakumarin Sabadham Movie Review and Rating

பாடல்களை பொறுத்தவரை வழக்கமாக ஹிப்ஹாப் ஆதியின் படத்தில் பாடல்கள் படு இரைச்சலாக இருந்தாலும், ஏதாவது ஒரு பாடல் ஹிட் அடிக்கும். ஆனால், இப்படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பாடல்களும் பெரிதாக கிளிக் ஆகவில்லை. பின்னணி இசை காதில் ரத்தம் அந்தளவிற்கு இரைச்சல். ஒளிப்பதிவு பெரிய பலம் கலர்ஃபுல் காட்சிகள் உள்பட பல காட்சியமைப்புகள் அருமை. இப்படத்தை எழுதி, இயக்கியவர் ஹிப்ஹாப் ஆதி, இவரது முதல் இயக்கத்தில் வெளியான படம் மீசைய முறுக்கு, அந்த படம் ஹிட்டடிக்க மீண்டும் இப்படத்தின் மூலம் இயக்குனாரா மாறியிருக்கிறார் ஆதி. அது தவறில்லை, கதையை அதுபோன்று நன்றாக எடுக்க வேண்டாமா? நாம் பார்த்து சலித்தக் கதை, அதை லைட்டாக பட்டி டிக்கரிங் பார்த்து நமது அட்லி போன்று சுவாரஸ்யமாகவாவது கொடுத்திருக்கலாம். திரைக்கதையில் சுத்தமாக சுவாரஸ்யம் இல்லை.

2K கிட்ஸை கவரும் விதமாக எடுக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு என்னமோ செய்திருக்கிறார் ஆனால் அது வொர்க்அவுட் ஆகவில்லை. அதேபோல் இப்படத்தின் பெயர் சிவக்குமாரின் சபதம், ஆனால் படத்தில் நாயகன் சபதம் ஒன்று நாயகன் செய்வார் அது என்ன சபதம் என்று யாருக்காவது தெரிந்தால் கமெண்டில் தெரிவிக்கவும் நாங்களும் தெரிந்து கொள்வோம். அந்தளவிற்கு தான் இருக்கிறது படம், இறுதியாக பிலோ ஆவ்ரேஜ் படம்தான் இந்த சிவக்குமாரின் சபதம்.

  Sivakumarin Sabadham Movie FC Rating: 2 /5  

 

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்