சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக இணைந்த இசையமைப்பாளர்! SK21

0
Sivakarthikeyan's 21th Movie Music Director GV Prakash
Sivakarthikeyan's 21th Movie Music Director GV Prakash

சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக இணைந்த இசையமைப்பாளர்: மாவீரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். ரங்கூன் என்கிற படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள இப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

மிலிட்டரி பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதன்மூலம் சிவகார்த்திகேயன் படத்திற்கு முதன் முறையாக ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0