‘எந்த நிலையிலிருந்தும் நாம் எழுந்து நின்று விடலாம்’ சிம்பு நம்பிக்கை

0
Simbu Statement about actors death and Corona Panic

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான சிம்பு, நடிகர்களின் இறப்பு மற்றும் கொரோனா குறித்து தனது கருத்துக்களை கூறியுள்ளார்.

Simbu Statement about actors death and Corona Panic
Simbu

சிம்பு கூறியுள்ளதாவது, ” உயிரினும் மேலான ரசிகர்களுக்கும் அன்பின் பொதுமக்களுக்கும் உங்கள் சிலம்பரசன் TR -ன் வணக்கங்கள். மிகுந்த துயரமான நாட்களாக இந்த சில நாட்கள் கடந்து போகின்றன. டாக்டர் சேது, சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புட் ஆகிய மூவருமே என் நண்பர்கள் மூவரின் இழப்பும் என்னை மிகவும் பாதித்துள்ளது. சினிமாவிற்கான இழப்பாக பார்க்கிறேன். இவர்களின் ஆன்மா இறைவன் மடியில் இழைப்பார வேண்டிக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எந்த ஆறுதலும் அவர்களைத் தேற்றி விடாது என்பதை அறிவேன். எனது கண்ணீரும் இதயமும் உங்களின் இந்த நிலையை மீட்டெடுக்க வேண்டிக் கொண்டே இருக்கும். 

இதேபோல் கொரோனா காலக்கட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸின் சத்தம். இறப்பின் கதறல். கொரோனா பாதிப்பில் மரணமடைந்த குடும்பத்திற்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Simbu Statement about actors death and Corona Panic
Sushanth Singh Rajput

நண்பர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ‘தில் பேச்சுரா’ இசைப்புயலின் வேண்டுகோள் போல அவரின் ரசிகர்களின் அபிமானத்தின்படி திரையரங்கில் வெளியாகி பெரு வெற்றி பெறவேண்டும். இறப்பு ஒரு கலைஞனின் வெற்றியை நிறுத்தி விடாது என்பதை உலகறிய செய்ய திரையரங்கில் வெளியாகட்டும். எனது வேண்டுகோளும் ஆசையும் அதுவே. இந்த நோயைக் கண்டு யாரும் திக்குற வேண்டாம், பேனிக்(Panic) ஆவதுதான் மிகப்பெரிய நோய். தைரியமாக எதிர்க்கொள்ளுங்கள். சுனாமி, காஜா புயல், என எத்தனையோ இயற்கை சீற்றங்களை எதிர்க்கொண்டு வெற்றி கண்டோம். நிறைய பேரின் வீடுகள் ஆசை ஆசையாய் வாங்கிய கார்கள் நீரில் மூழ்கிப் போயின, மீண்டெழுந்தோம். திரும்ப நிமிர்ந்து உட்கார்ந்தோம். 

Simbu Statement about actors death and Corona Panic
Simbu Stills

 இந்த கொரோனா நம்மை நமக்கு உதவிக்கொள்ள வழிவகுக்காமல் வீட்டில் முடக்கிப் போட்டுள்ளது. நேரடியாக உதவி செய்ய முடியாது, ஆனால் ஒருவருக்கொருவர் தைரியம் சொல்லுங்கள். கிளவுஸ் முகக் கவசம் அணிந்து சமூகத்தில் பரவியுள்ள இந்தக் கொரோனாவை இல்லாத நிலையை உருவாக்குவோம். மனதளவில் தளர்ந்து போய்விட வேண்டாம். எதற்கும் தற்கொலை தீர்வாகாது. எந்த நிலையிலிருந்தும் நாம் எழுந்து நின்று விடலாம். வெற்றி பெற்றுவிடலாம் என்பதை உங்கள் மனதிலிருந்து நீக்கிவிடாதீர்கள். மனபலம் கொண்டு கொரோனாவை விரட்டுவோம். (இம்யூன் பவரை) நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்வது முக்கியம். நாம் நம்மை இழந்துவிடக் கூடாது என்றால் தைரியம் கொள்வது மட்டுமே தீர்வு. எல்லோருக்கும் எல்லோரும் இருக்கிறோம் என்பதைச் சொல்லி சொல்லி மனக் குழப்பத்திலிருந்து வெளியிலேடுப்போம். அதுவே நாம் இப்போது செய்ய வேண்டிய முக்கியமான வேலை. செய்வோம்… இந்த இடரைத் தாண்டி நிலைபெற்று வெல்வோம்” என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 ‘சுஷாந்த் மரணத்திற்கு இது தான் காரணம்’ கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...