அனுஷ்காவின் ‘சைலன்ஸ்’ திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் அட்வைஸ்!

0
Silence Movie Censor Certificate

‘பாகமதி’ படத்திற்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சைலன்ஸ். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி  ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

Silence Movie Censor Certificate
Silence Movie Stills

தெலுங்கில் நிசப்தம், தமிழில் சைலன்ஸ் என பெயரிட்டுள்ள இப்படத்தில் அனுஷ்காவுடன், மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த இப்படம் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போனது. இப்படம் OTT யில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியானது, இதற்கு இப்பட தயாரிப்பாளர் கோனா வெங்கட் ‘எங்களது முன்னுரிமை எப்போதும் திரையரங்கு வெளியீடு தான் ஆனால் பொது முடக்கம் நீடிக்குமேயானால்  எங்கள் மாற்று வெளியீடாக OTT இயங்குதளம் இருக்கும்’ என கூறியிருந்தார்.

Silence Movie Censor Certificate

இந்நிலையில் தற்போது சைலன்ஸ் படத்திற்கு தணிக்கைக் குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது, மேலும் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட தணிக்கைக் குழு அறிவுறுத்தியதாக இப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை கிளப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...