சிம்பு தங்கையாக நடிக்கும் பிரபல நடிகை? சிலம்பரசன் 46

0

மாநாடு படத்திற்கு நடுவில் சிம்பு நடிக்கவுள்ள 46-வது படத்தை சுசீந்திரன் இயக்க, மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார், முக்கிய பாத்திரத்தில் பாரதிராஜா நடித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் சிம்புவின் தங்கை கதாபாத்திரத்தில் நந்திதா நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே அட்டகத்தி, புலி, உள்குத்து, எதிர்நீச்சல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Silambarasan TR 46 Movie Latest Update
Silambarasan TR 46 Movie Latest Update

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…