ஸ்ருதி ஹாசனின் ‘எட்ஜ்’ ஆல்பம் பாடல் வெளியீடு! | Shruti Haasan’s Edge Music Video

0
Shruti Haasan's Edge Music Video

‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என வலம்வந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

Shruti Haasan's Edge Music Video
Shruti Haasan

நடிப்பை விட இசையமைப்பது, பாடுவதில் அதீத ஆர்வம் கொண்ட ஸ்ருதி ஹாசன் ஆங்கிலத்தில் பல ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார். தமிழில் அவரது அப்பா கமல்ஹாசன் மற்றும் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லால் நடிப்பில் வெளியான ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்நிலையில் தற்போதைய ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றி, அவரது ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ பாடலை உருவாக்கி வெளியிட்டுள்ளார். அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகவுள்ள அவரது ஆல்பத்தின் அங்கமாக இப்பாடல் இடம்பெறவுள்ளது. இதுக்குறித்து ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளதாவது, “இசைதான் எனது இயல்பு, இசை என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும், அதைப் பகிர்ந்து கொள்ள முடிந்ததற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். எட்ஜ் உங்களுக்கு இருக்கும் குழப்பத்தையும், சீரற்ற உங்கள் அன்பான பகுதிகளையும் வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சி. மற்றவர்களிடம் நீங்கள் சிறந்ததை எதிர்பார்ப்பதை நிறுத்தும்போது, உங்களை நீங்கள் உண்மையாக புரிந்துகொண்டு மற்றும் ஏற்றுக்கொள்வதற்கான பயணம் தொடங்குகிறது” என கூறியுள்ளார்.

Shruti Haasan’s Edge Music Video

 

 

சினேகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ

கொட்டும் மழையில் அட்டகாச போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா!

டாக்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி!

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...