தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வளர்ச்சி பாதையில் பயணிக்கும் நடிகைகளில் ஒருவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிசியாக வலம்வரும் ஷ்ரத்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை மாற்றிய சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார்.


அவரது பதிவில் கூறியுள்ளதாவது, “எனக்கு 14 வயது இருக்கும், குடும்பத்தினர் பங்கேற்ற ஒரு பூஜையில் கலந்து கொண்டேன். அப்போது எனக்கு மாத விடாய் வந்தது, அம்மா என்னுடன் அங்கு வரவில்லை. அதனால் அருகில் இருக்கும் என்னுடைய ஆன்டி ஒருவரிடம் கூறினேன். சானிட்டரி பேட் எதுவும் எடுத்து செல்லவில்லை என்பதால் அதிக வருத்ததிற்குள்ளானேன். அருகில் நல்ல உள்ளம் கொண்ட மற்றொரு பெண் இருந்தார், நான் வருத்தமாக இருப்பதை பார்த்து, நான் பேசியதையும் ஒட்டு கேட்டுவிட்டு என்னிடம் பேசினார். பரவாயில்லை குழந்தை, கடவுள் உன்னை மன்னித்து விடுவார் என கூறினார். மாதவிடாய் நேரத்தில் பூஜையில் கலந்துகொண்டதற்காக தான் இப்படி கூறினார் அவர். அந்நாள் முதல் நான் பெண்ணிய வாதியாகவும் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவும் மாறினேன். இந்த முடிவு எடுக்கும் போது எனக்கு வயது 14″ என கூறியுள்ளார்.
Insta Feed:
பொன்மகள் வந்தாள் திரைப்பட விமர்சனம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...