கன்னடத்தில் யூடர்ன் படத்தின் மூலம் பிரபலமான ஷ்ரத்தா ஸ்ரீநாத், தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் சிறு வேடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.


அதைத் தொடர்ந்து வெளியான விக்ரம் வேதா ஷ்ராத்தாவை தமிழ் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. இதன்பின் தல அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து தமிழிலும் முன்னணி இடத்தைப் பிடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் & ஹிந்தி என பிசியாக நடித்துவரும் ஷ்ரத்தா தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “கடந்த 2017ம் ஆண்டு நந்தி ஹீல்ஸில் நடைபெற்ற ஒரு ஷூட்டிங்கில், போல்டான கதாபாத்திரம் என்பதால், தனக்கு புல்லட் ஓட்ட தெரியுமா என கேட்டனர். நான் நேரடியாக எனக்குத் தெரியாது எனக் கூற, ஆனால், பைக்கை எப்படி ஓட்டுவது என்ற பயிற்சி எனக்கு வழங்கப்பட்டது. பின்னர், பைக்கை ஓட்டும் போது எப்படி விழுந்தேன் என்பதை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், இந்திய சினிமாவில் போல்டான பெண் என்றால் பைக் ஓட்ட வேண்டும் என்பது எழுதப்படாத விதி” என வீடியோவுடன் ஒரு பதிவை போஸ்ட் செய்துள்ளார், அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ:
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து OTT -ல் வெளியாகும் வரலக்ஷ்மியின் திரைப்படம்!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...