வரிசைக்கட்டும் படவாய்ப்புகள்! மகிழ்ச்சியில் பிக்பாஸ் நடிகை

0
Shivani Narayanan's Upcoming New Movies
Shivani Narayanan's Upcoming New Movies

சின்னத்திரையில் அறிமுகமாகி பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த பிரபலத்தால் தற்போது தான் ஷிவானிக்கு பட வாய்ப்புகள் குவியத் துவங்கியுள்ளது. கமல் ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் விக்ரம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Shivani Narayanan's Upcoming New Movies
Shivani Narayanan’s Upcoming New Movies

இதைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி – பொன்ராம் படம், ஆர்.ஜே.பாலாஜி -யுடன் புதிய படம் என பிசியாக துவங்கியுள்ளார். அந்த வரிசையில் தற்போது, அறிமுக இயக்குனர் செல்வக்குமார் இயக்கும் படத்தில், நடிகர் வெற்றிக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்டு ‘பம்பர்’ திரைப்படம் உருவாகிவருவதாக கூறப்படுகிறது. வேதா பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தபடத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலத்தை சுற்றி படமாக்கியுள்ளதாகவும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளனர். 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்