தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். கடந்த 19 -ஆம் தேதி ஊரடங்கு விதிமுறையை மீறி கடையை திறந்திருப்பதாக கூறி இருவரையும் விசாரனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர் சாத்தான்குளம் காவல் துறையினர், அவர்கள் இருவரையும் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதன்பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மறுநாள் காலையில் கோவில் பட்டி கிளை சிறையில் போலீசார் அடைத்த நிலையில், போலீசாரின் கொடூரத்தினால் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்த செய்தி தமிழகம் முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்தொடர்பாக இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், 2 தலைமைக் காவலர்கள் மீது அலுவல் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தொடர்புடைய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் தங்களது கண்டனங்களை பதிவிட்டுள்ளனர்.
ஷிகர் தவான்:
“தமிழகத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டு இறந்துள்ள சம்பவத்தை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். இருவரை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்க, பொதுமக்கள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்” என தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
ஹர்பஜன் சிங்:
“அடிப்பவனுக்கு தேவை ஆயுதம். வலிப்பவருக்கு தேவை காரணம்.இனத்துக்காக, மதத்துக்காக,நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்.கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே?” என பதிவிட்டுள்ளார்.
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து OTT -ல் வெளியாகும் வரலக்ஷ்மியின் திரைப்படம்!
👉 சாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா!
👉 புல்லட் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது தவறி விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!
👉 சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!
👉 சமந்தா முத்தமிட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு? உண்மை நிலவரம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...