திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் மற்றும் மகன் சாந்தனு பாக்யராஜ் மற்றும் கோயம்பத்தூர் அழகி அதுல்யா ரவி நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என பெயரிட்டுள்ளனர்.


லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாக்கி அவரும் இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகியுள்ளது. தென்னிந்திய மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள் இயக்கிய அனுபவத்துடன், மலையாளத்தில் ‘லாவெண்டர்’, தமிழில் ‘ஜாம்பவான்’ உள்ளிட்ட படங்களில் இணை – துணை இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீஜர் இப்படத்தை கதை, திரைகதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் நடைபெறும் முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கித்யங்களையும் நகைச்சுவை மாறாமல், சற்றும் விரசம் இல்லாமல் சுவராஸ்யமாக உருவாக்கி வருவதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள முதல் பார்வையில் கல்யாண கெட் அப்பில் சாந்தனு, அதுல்யா இருவரும் அமர்ந்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
சேலையில் கவர்ச்சியை வாரி இறைக்கும் சாக்ஷி அகர்வால்!


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...