‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பில் ஷங்கரின் பிறந்தநாள் ஸ்பெஷல்:
இயக்குனர் ஷங்கர் தற்போது தமிழில் கமல்ஹாசன் நடிக்க இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’ என இரு மெகா பட்ஜெட் படங்களை இயக்கி வருகிறார்.
தற்போது ‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ஷங்கரின் பிறந்த நாள் விழாவை இந்த படபிடிப்பிற்கு நடுவே கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ஷங்கருடன் ராம் சரண், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தில் ராஜு தயாரிக்கும் இந்த ‘கேம் சேஞ்சர்’ படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாகவும், SJ சூர்யா வில்லனாகவும் நடித்து வருகின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.






இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண