ஷாருக்கான், நயன்தாரா குழுவுடன் திருப்பதி விசிட்! வைரல் வீடியோ

0
ShahRukh Khan and Nayanthara offered prayers at Tirupati

ஷாருக்கான், நயன்தாரா குழுவுடன் திருப்பதி விசிட்! வைரல் வீடியோ:

ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஜவான்‘. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படம் நன்றாக ஓடி, வசூலை கொட்ட வேண்டுமென்று இப்படத்தின் தயாரிப்பாளர், ஹீரோ ஷாருக்கான் மற்றும் நாயகி நயன்தாரா ஆகியோர் திருப்பதிக்கு சென்று சாமிதரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண