விஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமி விடுத்துள்ள வேண்டுகோள்!

0
Seenu Ramasamy Request to Vijay Sethupathi

தமிழ் சினிமாவின் தற்போது பிசியாக பறந்துக் கொண்டிருக்கும் ஒருசில நடிகர்களில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முன்னிலையில் உள்ளார். அந்த அளவிற்கு கையில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்கவுள்ளதாக நீண்ட மாதங்களாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்த மாதம் இப்படத்தின் பணிகள் துவங்கவுள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்திற்கு எதிராக கண்டன குரல்கள் மேலோங்கியுள்ளது.

Seenu Ramasamy Request to Vijay Sethupathi
Seenu Ramasamy Request to Vijay Sethupathi

முத்தையா முரளிதரன் ஈழத் தமிழராக இருந்தாலும், இன்றுவரை சிங்களராகவே தன்னை முன்னிலை படுத்தி வருகிறார், மேலும் ஈழப்போராட்டம் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி இப்படத்தை கைவிட வேண்டுமென ஈழத்தமிழர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில், விஜய் சேதுபதியின் விருப்பத்திற்குறிய இயக்குனர் சீனுராமசாமி இதுக் குறித்து, “விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள்! விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரரும் கேளீர் திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா நமக்கெதற்கு மாத்தையா? மாற்றய்யா?” என வேண்டுகோள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...