சீமானின் டுவிட்டர் பக்கம் முடக்கம்! மு.க.ஸ்டாலின் கண்டனம்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இவருடன் திருமுருகன்காந்தி, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் கணக்குகள் திடீரென நேற்று முதல் முடக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியிலான கோரிக்கைக்கு ஏற்ப இந்த கணக்குகள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் பகிர்ந்துள்ளதாவது, “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…