காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுமையாக நீக்கம்!

0
Scenes related to Kajal Agarwal completely deleted!
Scenes related to Kajal Agarwal completely deleted!

காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுமையாக நீக்கம்!: தமிழ், தெலுங்கு என படு பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால், கர்ப்பம் ஆனதிற்கு பிறகு நடிப்பிலிருந்து ப்ரேக் எடுத்துக் கொண்டார். இப்போது அழகிய ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

👉 சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்! பூஜையுடன் துவக்கம் 

இது ஒரு புறமிருக்க, இவர் கடைசியாக நடித்து முடித்த ஆச்சார்யா படத்திலிருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கில் சிரஞ்சீவி, ராம் சரண் நடிப்பில் கொரட்டல சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஆச்சார்யா.

Scenes related to Kajal Agarwal completely deleted!
Scenes related to Kajal Agarwal are completely deleted!

👉 திரிஷா நடிக்கும் ‘The Road! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தமாகி ஒரு சில நாட்கள் நடித்தும் முடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் புரோமொஷனில் இயக்குனர் கூறியதாவது, “சிரஞ்சீவி – காஜல் அகர்வால் இடையேயான காதல் காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டது. ஆனால் பிறகு மொத்தமாக பார்த்தபோது சிரஞ்சீவியின் பாத்திரத்திற்கு இந்த காட்சிகள் பொருந்தாமல் இருந்தது. ஆகவே காஜல் அகர்வாலிடம் இதைப்பற்றி கூறினோம் அவரும் ஒப்புக்கொண்டார். எனவே காஜல் நடித்த ஒட்டுமொத்த காட்சிகளையும் படத்திலிருந்து நீக்கிவிட்டோம், எனவே காஜல் அகர்வால் இப்படத்தில் இல்லை” என கூறி காஜல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த பாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது திரிஷா தான், இது பற்றி முன்பே தெரிந்திருக்குமோ? என்னமோ? துவக்கத்திலேயே படத்தை விட்டு வெளியேறிவிட்டார்.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்