‘ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா’ சரத்குமார் ஆவேசம்!

0
Sarathkumar Angry Reply on Twitter Comment

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் குறித்த செய்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

Sarathkumar Angry Reply on Twitter Comment

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிப்பில் OTT -யில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’, இப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் பெரும்பாலானோர் பாராட்டுக்களையே தெரிவித்து வருகின்றனர். அதற்கு காரணம் இப்படத்தின் கதைக்களம். இதுஒருபுறம் இருக்க இந்த படத்தை மனதார பாராட்டிய சரத்குமாருக்கு ஏற்பட்ட சங்கடம் தான் தற்போது ஹாட் நியூஸ். பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்த செலிபிரிட்டிகள் பலர் தங்கள் பாராட்டுக்களை கூறிவருகின்றனர். அந்த வகையில் நடிகர் சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் ” அருமையான படம். இயக்குனர் பெட்ரிக் நன்றாக வடிவமைத்துள்ளார் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் பெருமைகள் அனைத்தும் உங்களையே சாரும்” என பாராட்டி பதிவிட்டிருந்தார்.

Sarathkumar Angry Reply on Twitter Comment
Sarathkumar

இதை பார்த்த சூர்யா ரசிகர் ஒருவர் “சூர்யா டுவிட்டரில் இருக்கிறார், அவரை டாக் செய்து போடுடா” என ஒருமையில் கமென்ட் செய்திருந்தார். இதனை பார்த்த சரத்குமார் சும்மா இருப்பாரா, பதிலுக்கு அவரும் “ட்விட்டை ஒழுங்கா பாருடா” என ஒருமையில் பதிலளித்துள்ளார். இது சிறிது சலசலப்பையும், இணையதளத்திற்கு செய்தியாகவும் மாறியுள்ளது. 

Sarathkumar Angry Reply on Twitter Comment

 

 

பொன்மகள் வந்தாள் திரைப்பட விமர்சனம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...