சந்தானத்தின் ‘DD ரிட்டன்ஸ்’ பட தமிழக விநியோக உரிமையை கைப்பற்றிய நிறுவனம்:
சந்தானம் நடிப்பில் அறிமுக இயக்குனர் பிரேமானந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தை ஆர்கே என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், மொட்ட ராஜேந்திரன், மாசூம் சங்கர், ஃபெசி விஜயன், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை பைவ் ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 28ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண