“துணிவு… பரபரப்பாக…” சமுத்திரக்கனி பகிர்ந்த ஸ்பாட் ஸ்டில்ஸ்: அஜித் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் துணிவு. மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் போனி கபூர் தயாரித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழக உரிமையை கைப்பற்றியுள்ளது. ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இறுதிகட்ட (patch works) படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டு முடிவடைந்த நிலையில், தற்போது சமுத்திரக்கனி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதுக்குறித்த படங்களுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் சமுத்திரக்கனி பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE